டிலான் பெரேரா பொதுஜன பெரமுன கூட்டத்தில் பங்கேற்பு

248 0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவில் போட்டியிடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டத்திலும் டிலான் பெரேரா எம்.பி. கலந்துகொண்டுள்ளார்.

டிலான் பெரேரா ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.