கோப் குழு நடவடிக்கைக்கு ஊடக அனுமதி வழங்கியுள்ளமை ஆரோக்கியமானதாக அமையும் – கரு ஜெயசூரிய

367 0

ஈஸ்டர் தாக்குதல் குறித்து அறிக்கையிட நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எவ்வாறு மக்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளதோ அதேபோல் கோப் குழு நடவடிக்கைகளுக்கும் ஊடக அனுமதி வழங்கியுள்ளமையும் ஆரோக்கியமானதாக அமையும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அரச பொது  நிறுவனங்கள் தொடர்பான ஆய்வு குழுவின் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு ஊடகங்களுக்கு இன்று தொடக்கம்  அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 2 மணி முதல் 2.30 வரையில் ஆரம்ப நிகழ்வுகள் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் இடம்பெற்றது.

பிரதி சபாநாயகர், கோப் குழு தலைவர் சுனில் ஹந்துநெத்தி மற்றும் கோப்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இன் நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டக்குழு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.