27 வயதான இளைஞர் போதைப் பொருளுடன் கைது

315 0

ஹெரோயின் போதைப் பொருளுடன் பதுளை பகுதியில் ஒருவரை கைது செய்துள்ளதாக பதுளை பிராந்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் பதுளபிட்டி பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரிடம் இருந்து 2 கிராம் 660 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பதுளை பகுதியில் வசிக்கும் 27 வயதான முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பதுளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக பதுளை பிராந்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.