அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு

294 0

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி செயலாளர் எலிஸ் வேல்ஸ் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதியிலிருந்து 16 ஆம் திகதி வரை பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு அவர் விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அவர் தற்போது முதற்கட்டமாக பாகிஸ்தானுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளதுடன் அடுத்தாக இலங்கைக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளார்.

அவர் தனது விஜயத்தின் போது, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.