சர்வதேச சக்திகளுடன் ஒன்றிணைந்து 2015 ஆம் ஆண்டு என்னை தோல்வியடைச் செய்த தற்போதைய அரசாங்கம் நாட்டையும் நாட்டு மக்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கிவிட்டது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுயாதீனமான விசாரணை வேண்டும் என்று பேராயர் வேண்டுகோள் விடுக்கின்றார். அதனை ஏற்றுக்கொண்டு சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதுடன் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பொது எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஜனாதிபதியையும் பிரதமரையும் சந்தித்து கோரிக்கைவிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மொரட்டுவை மாநகர சபையின் புதிய கட்டட தொகுதியை புதன்கிழமை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.