மலையகத்தின் பிரபல அரசியல்வாதிகள் கழிவுத் தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் அமுனுமக பாராளுமன்றில் தெரிவித்தார்.
இன்று கழிவுத்தேயிலை வியாபாரம் மிகவும் மோசமான வகையில் இலங்கையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. உண்மையில் இந்த கழிவுத்தேயிலை வியாபாரமும் பயங்கரவாதமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தே செயற்படுகின்றது. குறிப்பாக பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் இவை ஒன்றாக கையாளப்படுகின்றது.
இங்கு பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் கூட மாவனல்லை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளில் கழிவுத்தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் இன்று மலையகத்தில் பிரசித்திபெற்ற அர்சையல்வாதில் சிலர் இந்த கழிவுத்தேயிலை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயங்களை அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

