ரகர் வீரர் வசீம் தாஜுதீன் கொலை வழக்கின் சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கொழும்பு முன்னாள் பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக அதி குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட மா அதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீனின் உடலிலிருந்து பெறப்பட்ட எச்சங்களை காணாமல் செய்த சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக சட்ட மா அதிபரினால் இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காணாமல் போன தாஜுதீனின் எச்சங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே முன்னாள் சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபரின் தொடர்பாடல் அதிகாரி நிஷாரா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் சட்ட வைத்திய அதிகாரி ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

