ஈஸ்டர்தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் இடம்பெற வேண்டுமாயின் சிறப்பு சுயாதீன ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று விஜயராம மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் இல்லத்தில் இடம் பெற்றது.
இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குண்டுத்தாக்குதல் தொடர்பில் ஆராயும் அனைத்து விசாரணை குழுக்கள் மீதும் எவ்வித நம்பிக்கையும் கிடையாது, என்றும் விசாரணைகள் சுயாதீனமாக இடம் பெறுகின்றதா என்ற சந்தேகம் காணப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றார்கள். விசாரணைகள் தொடர்பில் தான் தொடர்ந்து அதிருப்தியடைவதாக மத தலைவர்கள் குற்றஞ்சாட்டுவது கவனத்திற்குரியது.
ஆகவே குண்டுத்தாக்குதல் தொடர்பில் எழுந்த கேள்விக்கு இதுவரையில் உரிய பதில் கிடைக்கப் பெறவில்லை என்பதே எமது நிலைப்பாடாக காணப்படுகின்றன.
யாதீனமான விசாரணைகள் இடம் பெற வேண்டுமாயின் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நிறுவுதல் அவசியமாகும். இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் என்ற ரதீயில் தான் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் பிரத்தியேகமாக எடுத்துரைப்பேன் என்றும் கூறினார்.

