யார் இந்த சுஷ்மா சுவராஜ் ? அவரது வாழ்க்கை வரலாறு அரசியல் ….

81 0

இந்தியாவின் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது 67 ஆவது வயதில் சுகயீனம் காரணமாக நேற்றையதினம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வைத்தியசாலையில் காலமானார்.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர்.

இந்தியாவின்  பதினைந்தாவது மக்களவையின் எதிர்கட்சித் தலைவராக இருந்துள்ளார்.

சுஷ்மா, டெல்லியின் முன்னாள் முதல் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி வரை பதவி வகித்தார்.

முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார் சுஷ்மா சுவராஜ்.

பாராளுமன்ற உறுப்பினராக ஏழு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூன்று முறை சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டெல்லியின் ஐந்தாவது முதலமைச்சராக கடந்த 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 13 ஆம் திகதி பதவி ஏற்றார்.

சுஷ்மா, டெல்லியின் முதல் பெண் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பல சமூகங்களிலும் கலாச்சாரங்களிலும் தொடர்புடையவர்.

இந்திரா காந்திக்குப் பிறகு வெளிவிவகார அமைச்சர் பதவி வகித்த இரண்டாவது பெண் சுஷ்மா சுவராஜ் ஆவார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான இந்திய-இஸ்ரேல் பாராளுமன்ற நட்புக் குழுவின் தலைவராக செயல்பட்டார்.

சுஷ்மா சுவராஜ் அம்பாலாவில் உள்ள எஸ்.டி கல்லூரியின் என்.சி.சி சிறந்த கேடட் விருது பெற்றார்.

கடந்த 1973 இல் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார்.

கடந்த 2008 – 2009 ஆம் ஆண்டுகளில் மாநிலங்களவை ஹவுஸ் கமிட்டி உறுப்பினராக இருந்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் திகதி சுஷ்மா சுவராஜ் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

27 மே 2014 முதல் 16 பெப்ரவரி 2016 வரை மத்திய அமைச்சரவையில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு இந்திய விவகாரங்களுக்கான துறையில் அமைச்சராக பணியாற்றினார்.

வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்து வந்தார். சமூக வலைதளங்களில், இந்தியர்கள் எழுப்பிய கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வந்தார். இதனால், பலரும் அவரை பாராட்டி வந்தனர்.

அண்மையில் இடம்பெற்ற இந்திய மக்களவை தேர்தலில், உடல்நலக்குறைவால் சுஷ்மா சுவராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு சிறுநீரக மாற்று அறுவை சிக்கிச்சை செய்து கொண்டார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக டெல்லி எம்ய்ஸ் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார்,

இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி  டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் காலமானார்.

சுஷ்மாவின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து தங்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.