வெல்லம்பட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம்!

306 0

வெல்லம்பட பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெல்லம்பட பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட 76  கத்திகள் மற்றும் 13 கோடரிகளை திருப்பி வழங்க முற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு அவர் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து வெல்லம்பட பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது பள்ளிவாசல் ஒன்றிலிருந்து குறித்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.