நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா

314 0

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சலிந்த திஸாநாயக்கவின் மறைவால் வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற ஆசனத்தை நிரப்ப அவர் பதவி விலகியுள்ளார்.

இந்த பதவி விலகல், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது ஆட்களில் ஒருவரை தேசிய பட்டியல் உறுப்பினராக நியமிக்க அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சலிந்த திஸாநாயக்க தனது 61 ஆவது வயதில் நேற்று முன்தைனம் காலமாகியுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.