சிறைச்சாலை உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது

325 0

மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைதிகளுக்கு கஞ்சா கட்டுக்களை விநியோகிக்க முயன்றவேளை கைது செய்யப்பட்டுள்ளதுடன் கையடக்கத் தொலைபேசிகளையும் வழங்க முற்பட்டுள்ளார்.

நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை மாலை கைதிகளுக்கு அவர்களுடைய ஆடைகளுக்குள் மறைத்து வைத்து வழங்க முற்பட்ட வேளை சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

கைதிகளுக்கு வழமையாக ஆடைகளை வழங்குவது போன்று இரண்டு கஞ்சா கட்டுகள், 3 கையடக்கத் தொலைபேசிகளையும் கொடுக்க முற்பட்ட வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் இன்றைய தினம் நீதிமன்றில்  ஆஐர்படுதத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.