சுஸ்மா சுவராஜ் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் பேரிழப்பு-இராதாகிருஷ்ணன்

273 0

இந்தியாவின் அனுபவம் மிக்க அரசியல்வாதியும் சிறந்த பெண் ஆளுமையை கொண்டவரும் பெண்களின் திறமைக்கு எடுத்துக்காட்டாகவும் இலங்கையின் ஒரு சிறந்த அரசியல் நண்பனுமாக இருந்த முன்னாள் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மாசுவராஜின் மறைவு இந்தியாவிற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் ஒரு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டள்ளார்.

இலங்கையை பொறுத்த அளவிலே கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மிகவும் சாதூரஜயமாகவும் மிகவும் நுணுக்கமாகவும் செயற்பட்டு அதற்கு தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர்.

மறைந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பலமுறை இலங்கைக்கு விஜயம் செய்து இங்கு இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக மிகவும் அவதானமாக கவனம் செலுத்தியவர்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலையக பகுதிக்கு விஜயம் செய்ததில் பாரிய ஒரு பங்களிப்பு முன்னால் வெளியுறவுத்துறை அமைச்சருடையது என்று சொன்னால் அது மிகையாகாது.

உலக வரலாற்றில் பெண் அரசியல் செயற்பாட்டாளர்களாக ஒரு சிறிய பகுதியினரே செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் அவர்களுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் வகையில் செயற்பட்டவர் அமரர் சுஸ்மாசுவராஜ். அவரை இழந்த தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தனது இரங்கல் செய்தியில் மேலும் குறிப்பிட்டள்ளார்.