தாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள 1,603 பேருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை இடம்றெவிருப்பதாக இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரதுறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் நாளை அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடதக்கது. மேலும், இதன் கீழ், 686 மூன்றாம் நிலை தாதி அதிகாரிகளுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளதாககவும், ஆரம்ப தாதி கல்லூரிகளின் கீழ் வாட் முகாமைத்துவம், மற்றும் கண்காணிப்புத் தொடர்பில் 800 பேருக்கும், பொதுச் சுகாதார தாதிகளாக 115 பேருக்கும் இதன் போது நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

