மஹிந்தானந்தாவின் சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் குறித்து பல உண்மைகள் அம்பலம்

416 0

mahindananda-aluthgamageஅண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் நேர்காணலின் போது முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே தனக்கு லண்டனிலோ அல்லது இங்கிலாந்திலோ எந்தவித சொத்துக்களும் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய சகோதரனுக்கே குறிப்பிட்ட இடங்களில் வர்த்தக தொடர்புகள் இருப்பதாக மகிந்தானந்த கூறியிருந்தார்.

ஆனால் தற்போது அரசியலில் இருக்கின்ற அரசியல்வாதிகள் தங்களது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது குடும்ப உறுப்பினர்களையும் பினாமிகளையும் வர்த்தகத்தில் ஈடுப்பட செய்கின்றனர்.

இந்த நிலையில், மகிந்தானந்தவின் முதல் மனைவி பெயரில் லண்டனில் பல வர்த்தக தொடர்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்தானந்த மற்றும் அவரது முதல் மனைவி ஆஷா விஜயந்தி பெரேராவுக்கும் இடையில் விவகாரத்து பெற்றிருந்தாலும் தற்போதும் அவர்கள் இணைந்து வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மகிந்தானந்த விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அமைச்சின் கூட்டங்களில் மேற்பார்வை செய்ய ஆஷா நியமிக்கப்பட்டிருந்தார். மகிந்தானந்த உள்ளிட்ட ஒப்பந்தம் மூலம் ஏலம் எடுப்பவர்களுக்கு இடையில் ஆஷா தொடர்பு ஒன்றை மேற்கொண்டு வந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் அவர்களது மகன்கள் அடியாட்களை வைத்து மகிந்தானந்த மற்றும் ஆஷாவை தாக்குவதற்கு திட்டமிட்டிருந்தனர். ஏனெனில் அவர்களது சூழ்ச்சிகளுக்கு இவர்கள் தடையாக இருந்துள்ளார்கள என குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த நேரத்தில் மகிந்தானந்தவின் சொத்து விபரம் குறித்து ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் ராஜபக்ஸர்களே வெளியிட்டிருந்தனர்.

சட்டவிரோதமாக குவித்த பணத்தைப் பயன்படுத்தி மஹிந்தானந்த, ஆஷா என்ற பெயரில் லண்டனில் சைடென்ஹாம் ஹில் என்ற ஆடம்பர வீடு ஒன்றை வாங்கினார் என்றும் அதன் முகவரி Flat 04, Blyton House, 19-23, Sydenham Hill, London, SE266SH என்றும் ஊடகங்களில் இந்த விடயம் கசியத் தொடங்கியது.

ஊடகங்களில் இந்த தகவல் கசிந்த சில நாட்களில் ஆஷா லண்டனில் உள்ள வீட்டை விற்பனை செய்ய சென்றுள்ளார்.

மகிந்தானந்தாவின் லண்டன் வர்த்தகமானது ஆஷா தலைமையின் கீழ் இயங்கியது. அதன் கணக்கு லாயிட்ஸ் வங்கியில் பராமரிக்கப்பட்டது. (அதன் விபரங்கள் Lloyds Bank PLC, கணக்கு இலக்கம்- 03495xxx, வரிசை குறியீடு 30-92-XX )

தற்போது குறித்த கணக்கில் அண்ணளவாக ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்ட் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகிந்தானந்தாவிற்கு கொழும்பு மற்றும் நாவலப்பிட்டிய பகுதியில் பல சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அரசியல்வாதியாகிய பின்னரே அனைத்து சொத்துக்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், பரம்பரையாக மேற்கொண்டு வந்த வர்த்தகத்தில் சேமித்த பணத்தை வைத்தே குறித்த சொத்துக்களை தான் வாங்கியதாக மகிந்தானந்த குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், மஹிந்தானந்தாவின் சந்தேகத்திற்குரிய சொத்துக்கள் தொடர்பில் குறித்து பல உண்மைகள் அம்பலமாகியிருந்தன.

ஆனால் இவ்வாறான விடயங்கள் குறித்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் விசாரணைகள் மேற்கொள்ள முடிந்திருந்தது.

பல்வேறு நபர்களிடம் இருந்து இந்த விடயம் குறித்து தெரிய வந்திருந்தாலும், இறுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோட்ட தொழிற்சங்கத்தில் 1.4 மில்லியன் ரூபா மோசடி சம்பவம் தொடர்பில் மஹிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மஹிந்தானந்தா மீதான அனைத்து ஊழல்களும் தற்போது மூடிமறைக்கப்பட்டு சமூகத்தின் முன் அப்பாவி போன்று நடந்துக் கொள்கின்றார்.

மஹிந்தானந்தா மற்றும் ஆஷாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய பல காரணங்கள் உள்ளன. ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள முன்னணி அமைச்சர் ஒருவர் ஆஷாவின் காதலனாக இருக்கின்றார்.

குறித்த அமைச்சர் ஏசிஎல் கேபிள்ஸின் உரிமையாளர் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.