ஐக்கிய அரபு இராஜ்ஜிய சிறைகளில் உள்ள இலங்கை கைதிகளை இடமாற்ற நடவடிக்கை!

257 0

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சிறைகளில் உள்ள இலங்கைக் கைதிகளை நாடு கடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அங்கிருக்கும் இலங்கைக்கான தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“கலீஜ் டைம்ஸ்” (Khaleej Times) என்ற பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள விசேட செவ்வியோன்றிலேயே ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கான இலங்கைத் தூதரக அதிகாரியொருவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சிறைச்சாலைகளில் இலங்கையைச் சேர்ந்த 600 குற்றவாளிகள் உள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறு குற்றங்களுக்காகவே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அவர்களை இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதனால் அவர்களின் குடும்பத்தினரை அவர்கள் சந்திக்க உதவுவதாகவும் அமையும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.