சட்­ட­வி­ரோத மது­பானம் அருந்தி 10 க்கும் மேற்­பட்டோர் பலி: பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரிக்கு இட­மாற்றம்!

177 0

மீரி­கம – பல்­லே­வெல பிர­தே­சத்தில் சட்­ட ­வி­ரோத மது­பா­னத்தை அருந்தி 10க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பிர­தே­சத்தில் இயங்கி வந்த சட்­ட­வி­ரோத மது­பான தயா­ரிப்பு நிலை­யத்தில் விநி­யோ­கிக்­கப்­பட்ட மது­பா­னத்தை அருந்­திய நிலை­யி­லேயே இவர்கள் இவ்­வாறு உயி­ரி­ழந்­துள்­ள­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. கடந்த வெள்­ளிக்­கி­ழமை குறித்த சட்­ட­வி­ரோத  மதுப்­பா­னத்தை அருந்­திய சிலர் வாந்தி மற்றும் மயக்­க­முற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட பின்னர் இருவர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மீரி­கம – பல்­லே­வெல மற்றும் வெளிப்­ பி­ர­தே­சங்­களை சேர்ந்த சிலரும் குறித்த சட்­ட­வி­ரோத மதுப்­பா­னத்தை அருந்தி சுக­வீ­ன­முற்ற நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்று திங்­கட்­கி­ழமை வரை சுமார்10 க்கும் மேற்­பட்டோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் உயி­ரி­ழப்பு குறித்த சரி­யான எண்­ணிக்­கையை கூற இய­லாது என பொலிசார் தெரி­வித்­தனர்.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர மேலும் தெளி­வு­ப­டுத்­து­கையில்,

பல்­லே­வெல பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட பிர­தே­ச­மொன்றில் சட்ட விரோ­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட மது­பா­னத்தை அருந்­திய பலர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­க­ளையும் பொலிஸார் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இவ்­வாறு சட்ட விரோ­த­மாக மது­பா­னத்தை தயா­ரித்து அதனை வியா­பாரம் செய்து வந்த பிர­தான சந்­தே­க­நபர் உள்­ளிட்ட இருவர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எவ்­வா­றி­ருப்­பினும்  குறித்த பிர­தேச மக்கள் இந்த விடயம் குறித்து முறை­யிட்டு வரு­கின்­றனர்.அத்­தோடு சில ஊட­கங்­களும் இதனை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. ஆனால் பல்­லே­வெல பொலிஸார் இவ்­வா­றா­ன­தொரு சட்ட விரோத மது­பான உற்­பத்தி அந்த பிர­தே­சத்தில் இடம்­பெ­ற­வில்லை என்றே தெரி­வித்து வந்­தனர்.

பல்­லே­வெல பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் இவ்­வா­றான பொறுப்­பற்ற செயல் மற்றும் அவ­ருக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் பொலிஸ் தலை­மை­யகம் கவனம் செலுத்­தி­யது. அதற்­கி­ணங்க அவரை பல்­லே­வெல பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து இட­மாற்ற பொலிஸ் தலை­மை­யகம் தீர்­மா­னித்­துள்­ளது.

அத்­தோடு சட்ட விரோத மது­பான உற்­பத்தி மற்றும் வியா­பார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டு வந்த சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி நட­வ­டிக்கை எடுக்­காமை குறித்தும் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்னர் இந்த சந்­தே­க­ந­பர்­களை கைது செய்­வ­தற்கு அவரால் ஏதேனும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா? இந்த சட்ட விரோத மது­பான உற்­பத்தி நிலை­யத்தை அகற்­று­வ­தற்கு ஏதேனும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதா ? என்­பது தொடர்­பிலும் பொலிஸ் தலை­மை­யகம் விஷேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

இது­மாத்­தி­ர­மன்றி இந்த குற்­றங்­களை இவர் திட்­ட­மிட்டு மறைத்துள்ளாரா? என்பது தொடர்பில் ஆராயுமாறு  பொலிஸ் சட்ட பிரிவினால் கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்லேவெல பொலிஸாரால் விசாரணைகள் முன் னெடுக்க படவில்லை. மாறாக கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் , கம்பஹா பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று குறிப்பிட்டார்.