ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை-சந்திம

217 0

ஐக்கிய தேசிய கட்சிக்கு மக்கள் மீது நம்பிக்கை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

காலி, ஹபுகல பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எந்த விதத்திலாவது வாக்குகளை பெற்று தனது அரசியல் வாழ்க்கையை நிலை நிறுத்திக் கொள்வதே நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நாட்டின் சிறுபான்மையினரின் வாக்குகளை இனவாத அடிப்படையில் பெற்றுக் கொள்ள முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.