ஓமான் இலங்கைத் தூத­ர­கத்­தினால் தொலை­பேசி சேவை அறி­முகம்!

293 0

ஓமான் நாட்­டுக்­கான  இலங்கைத் தூத­ரகம், அந்­நாட்டில் பணி­யாற்றும் இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளுக்கு சிறந்த சேவை­களை வழங்­கு­வ­தற்­காக தொலை­பேசி அழைப்பு சேவை ஒன்றை அறி­முகம் செய்­துள்­ளது.

ஓமானில் வசிக்கும் இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளுடன் நேரடித் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தவும், அவர்­க­ளுக்கு சிறந்த சேவை­களை உறுதி செய்­வ­தற்­கா­கவும் தொலை­பேசி அழைப்பு சேவை ஆரம்­பித்­து­வைக்­கப்­பட்­டுள்­ளது என ஓமா­னுக்­கான இலங்கை தூதுவர் ஓ.எல். அமீ­ரஜ்வத் தெ­ரி­வித்தார்.

இந்த தொலை­பேசி அழைப்பு சேவை­யா­னது கட்­ட­ண­மில்­லாத தொலை­பேசி, வாட்ஸ்அப், இமோ, மெசேஜிங் மற்றும் குறுஞ் செய்­திகள் போன்ற பல்­வேறு வகை­யான தொடர்பு முறை­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது என தூதுவர்  மேலும் விளக்­கினார்.

ஓமானில் வசிக்கும் இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்கள் தொழி­லாளர் விவ­கா­ரங்கள் தொடர்­பான சேவை­களைப் பெறு­வ­தற்கு மஸ்­கட்டில் உள்ள இலங்கை தூத­ர­கத்­துடன் நேர­டி­யாக தொடர்­பு­கொள்­வ­தற்கு இந்த முறை­களில் ஏதேனும் ஒன்றைப் பயன்­ப­டுத்­தலாம்.

ஓமானில் உள்ள இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்­களின் கேள்­வி­க­ளுக்கு தூத­ரகம் பதி­ல­ளித்து அவர்­க­ளுக்கு சிறந்த சேவை­களை வழங்­கு­வதை உறுதி செய்யும். இந்த நோக்­கத்­துக்­காக, கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்­ப­தற்­கான பிரத்­தி­யேக அதி­கா­ரிகள் தூத­ர­கத்தில் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர்.

தேவை­யேற்­படும் பட்­சத்தில் தொடர்பு­கொள்­வ­தற்­காக, தூதுவர் அமீ­ரஜ்வத் ஓமானில் வசிக்கும் அனைத்து இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்­க­ளுக்கும் தங்­களை தூத­ர­கத்தில் பதிவு செய்­யு­மாறு வேண்­டுகோள் விடுத்தார்.

ஓமானில் உள்ள இலங்­கையின் புலம்­பெயர் தொழி­லா­ளர்கள், தொழி­லாளர் பிரச்­சி­னைகள் தொடர்பான சேவைகளைப் பெறுவதற்கும் தூதரகத்தில் தங்களை பதிவுசெய்வதற்கும் பிரத்தியேக தகவல் தொடர்பு முறைகள் மூலம் மஸ்கட்டில் உள்ள தூதரகத்தை நேரடியாக தொடர்புகொள்ளலாம்.