10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் குடும்பத்தலைவர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என பளை பொலிஸார் தெரிவித்தனர்.

பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமுனை பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டார்.
கடற்படையின் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மாமுனை – பருத்தித்துறை பிரதான வீதியின் காட்டுப்பகுதிக்குள் பொலிஸாரின் ரோந்து நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 5 பொதிகள் பொதியிடப்பட்ட 10 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.
செம்பியன்பற்று பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய குடும்பத்தலைவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடம் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 15 லட்சம் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேகநபரை இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

