மருத்துவக்கழிவுகளை நீரில் கொட்டிய யுகம் தற்போதில்லை – சம்பிக

351 0

வைத்தியசாலைகளின் மருத்துவக்கழிவுகளை நீரில் கொட்டிய யுகத்தை மாற்றியமைத்து அவற்றை எவ்வித பாதிப்பும் இன்று தொழிநுட்ப ரீதியாக அகற்றும் வேலைத்திட்டத்தை தமது அரசாங்கமே முன்னெடுத்தது என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

உலக வங்கி வேலைத்திட்டங்கள் பல இருக்கின்றன. அவற்றுக்கமைய நில மேம்பாட்டுக் கழகத்தை நிதி ரீதியாகவும், தொழிநுட்ப ரீதியாகவும் மேம்படுத்தியுள்ளோம். அதன் பிரதி பலன் மக்களை சென்றடைகின்றது.

கொழும்பை அனைத்து துறைகளிலும் வளர்ச்சியடைச் செய்துள்ளோம். துறைமுகம், புகையிரத சேவை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் விருத்தியடைந்துள்ளன. அத்தோடு குப்பை மீள்சுழற்சியும் முறையாக பேணப்படுகின்றன. எனவே கொழும்பில் எந்த பகுதியில் வசிக்கும் மக்களும் எந்த நேரத்திலும் குப்பைகளை முறையாக அகற்ற முடியும் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.