பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவ விசாரணைகள் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க உத்தரவு

343 0

jamயாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக இரு மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்வபவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் இவ்வுத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை மாலை பிறப்பித்துள்ளார்.
ஆரம்பத்தில் இச் சம்பவம் வெறுமனே வீதி விபத்து என்ற பார்வையில் யாழ்.பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
இதன் பின்னர் உயிரிழந்த மாணவர்களின் சடலங்களை பிரேத பரிசோதணை மேற்கொண்ட பின்னர் அது விபத்தல்ல சூட்டு கொலை சம்பவம் என்று தெரியவந்த பின்னர் இச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் யாழ்.பொலிஸ் நிலைய குற்றப் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த விசாணையில் யாழ்.பொலிஸ் நிலையத்தினைச் சேர்ந்த 5 பொலிஸார் கைது செய்யப்பட்ட பின்னர் இக் கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி கைது செய்யப்பட்ட 5 பொலிஸாரையும் தமது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொண்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.