மஹிந்த அணி­யி­லி­ருந்து வெளி­யே­றினார் வெல்­கம..!

192 0

மஹிந்­த­வுடன் இணைந்து செயற்­பட்டு வந்த குமா­ர­ வெல்­கம அவ்­வ­ணி­யி­லி­ருந்து விலகி சுதந்­தி­ரக்­கட்­சியின் நிகழ்­வு­களில் பங்­கேற்க ஆரம்­பித்­துள்ளார். நேற்று கொலன்­னா­வையில் நடை­பெற்ற சுதந்­தி­ரக்­கட்­சியின் கிளை திறப்பு விழா­விலும் அவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இணைந்து பங்­கேற்­றி­ருந்தார். 

இதே­நேரம், பொது­ஜன முன்­ன­ணியின் முத­லா­வது தேசிய மாநாடு எதிர்­வரும் மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதில் பங்­கேற்­கப்­போ­வ­தில்லை என்று களுத்­துறை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார வெல்­கம தெரி­வித்­துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனா­தி­பதி தேர்தல் நிறை­வ­டைந்த பின்னர் நடை­பெற்ற முத­லா­வது சுதந்­தி­ரக்­கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் கூட்டு அர­சாங்­கத்­தினை அமைக்க  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முடிவு எடுத்த போது அதற்குக் கடு­மை­யான எதிர்ப்­புக்­களை தெரி­வித்து அக்­கூட்­டத்­தி­லி­ருந்து குமா­ர­வெல்­கம வெளி­யே­றி­யி­ருந்தார்.

அத­னைத்­தொ­டர்ந்து ஏற்­க­னவே நெருக்­க­மான உற­வு­களைக் கொண்­டி­ருந்த முன்னாள் ஜனா­தி­ப­தியும், எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் இணைந்து செயற்­பட குமார வெல்­கம ஆரம்­பித்­தி­ருந்தார்.

இருப்­பினும், ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் பெயர் முன்­மொ­ழி­யப்­பட்­ட­தை­ய­டுத்து கடு­மை­யான அதி­ருப்­தி­களை குமார வெல்­கம பகி­ரங்­க­மாக வெளி­யிட ஆரம்­பித்­தி­ருந்தார். இதனால் மஹிந்த அணி­யி­ன­ருக்கும் அவ­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் ஏற்­பட ஆரம்­பித்­தி­ருந்­தன..

ஏனைய உறுப்­பி­னர்­களின் முறைப்­பா­டு­க­ளுக்கு அமை­வாக, கட்சி விட­யங்­களை பகி­ரங்­க­மாக விமர்ச்­சிப்­பதை தவிர்க்­கு­மாறு மஹிந்த ராஜ­பக்ஷ குமார வெல்­க­மவைக் கோரி­யி­ருந்தார். இருப்­பினும் தான் பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பினர் இல்லை என்ற வாதத்­தினை முன்­னி­லைப்­ப­டுத்­திய குமா­ர­வெல்­கம தனது கருத்­துக்­களை தொடர்ந்தும் தெரி­வித்து வந்­த­தோடு சுதந்­தி­ரக்­கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நடை­பெற்ற சமய நிகழ்­விலும் திடீ­ரெ­னக்­க­லந்­து­கொண்டார்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், எதிர்­வரும் மாதம் 11ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள பொது­ஜன முன்­ன­ணியின் தேசிய மாநாட்டில் மஹிந்த ராஜ­பக்ஷ உத்­தி­யோக பூர்­வ­மாக அக்­கட்­சியின் தலைமைப் பொறுப்­பினை ஏற்­க­வுள்ள நிலையில் அம்­மா­நாட்டில் பங்­கேற்­பது தொடர்பில் கருத்து வெளி­யிட்ட குமா­ர­வெல்­கம, நான் சுதந்­தி­ரக்­கட்­சியின் உறுப்­பி­ன­ரா­கவே தற்­போதும் உள்ளேன். நான் பொது­ஜன முன்­ன­ணியின் உறுப்­பு­ரி­மை­யையும் பெற்­றி­ருக்­க­வில்லை. ஆகவே பிறி­தொரு கட்­சியின் மாநாட்டில் பங்கு பற்­ற­வேண்­டிய அவ­சியம் இல்லை என்றார்.

அதே­நேரம், சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் தொடர்ந்தும் செயற்­ப­டு­வீர்­களா என வினவியபோது, மத்திய குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு இன்னமும் எனக்கு விடுக்கப்படவில்லை. ஆனால் கட்சியின் உறுப்பினராக நான் தொடர்ந்தும் செயற்படுவேன் என்றார்.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவையும் விரைவில் குமாரவெல்கம தனித்து சந்தித்து  பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.