மகியங்கனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மகியங்கனையைச் சேர்ந்த கே.ஜி.சீ. குருப்பு என்ற 0359 என்ற இலக்கத்தையுடைய இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த பொலிஸ் உத்தியோகத்ததே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கடந்த 1991ம் ஆண்டிலிருந்து குறித்த உத்தியோகத்தர் பொலிஸ் சேவையில் இணைந்து சேவையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இத்தற்கொலை குறித்து மகியங்கனை நீதவான் நீதிபதி விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக மகியங்கனை அரசினர் வைத்தயசாலைக்கு கொண்டு செல்லும்படி பொலிசாரைப் பணித்தார்.
இந்நிலையில் குறித்த உத்தியோகத்திரின் மரணம் தற்கொலை என உறுதி செய்யப்பட்ட போதிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் மகியங்கனைப் பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

