ஈராக்: மின் உற்பத்தி நிலையம் மீது தற்கொலைப்படை தாக்குதல்

275 0

201610211144570832_suicide-attackers-kill-16-at-iraq-power-plant_secvpfஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள மின்சார உற்பத்தி நிலையம் மீது இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் 16 பேர் உயிரிழந்தனர்.ஈராக் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டிபிஸ் நகரில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரானை சேர்ந்த ஒரு நிறுவனம் அமைத்து வருகிறது. இன்று காலை சுமார் 8 மணியளவில் இந்த மின் உற்பத்தி நிலையத்துக்குள் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர்.

தங்கள் உடல்களில் கட்டியிருந்த குண்டுகளை அவர்கள் வெடிக்க வைத்ததில் 16-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் டிபிஸ் நகர மேயர் அப்துல்லா நூருதீன் அல்-சலேஹி தெரிவித்துள்ளார்.