பொரலஸ்கமுவ மற்றும் கல்முனை பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொரலஸ்கமுவ, ஹொரண – கொழும்பு பிரதான வீதியில் பில்லேவ விகாரைக்கு அருகில் சைக்கிள் ஒன்று லொறி ஒன்றில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது சைக்கிளை செலுத்திச் சென்றவர் பலத்த காயமடைந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸை பகுதியை சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதேவேளை, கல்முனை, கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 37 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி லொறி ஒன்றுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

