அரசு டாக்டர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு

261 0

ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக, அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இது குறித்து, அக்கூட்டமைப்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அரசு டாக்டர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும். மருத்துவக் கல்லுாரிகளில், டாக்டர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது. மருத்துவ மேற்படிப்பு முடித்தவர்களை, கவுன்சிலிங் வாயிலாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட, கோரிக்கைகளை வலியுறுத்தி, சுகாதாரத் துறை செயலரிடம் மனு அளித்துள்ளோம்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 29 முதல், ஒத்துழையாமை போராட்டம், வேலை புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும். ஆக., 20ல், மனித சங்கிலி போராட்டம், 23ல், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம், 27ல், வேலை நிறுத்த போராட்டம் என, தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம். அவசர சிகிச்சைக்கு பாதிப்பு ஏற்படாதபடி, போராட்டங்கள் நடத்தப்படும்.இவ்வாறு, செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.