வேலூரில் ஸ்டாலின் 3 நாள் சூறாவளி பிரசாரம்

392 0

சென்னை, வேலுார் லோக்சபா தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல் கட்டமாக, நாளை முதல், மூன்று சட்டசபை தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.வேலுார் லோக்சபா தொகுதி தேர்தல் பணிக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு:அடுத்த மாதம், 5ம் தேதி நடைபெறவுள்ள, வேலுார் லோக்சபா தொகுதி தேர்தலில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, வரும், 27ல், குப்பம்; 28ல், வாணியம்பாடி; 29ல், அணைக்கட்டு சட்டசபை தொகுதிகளில், ஸ்டாலின், சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.