வனாதவில்லு – லொக்டோ தோட்டத்தில் தங்கியிருந்த 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று (24) அதிகாலை 2 மணியளவில் குறித்த 6 பேரும் கைது செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி குறித்த பகுதியில் இருந்து டெட்டனேட்டர்கள் உட்பட பாரிய அளவிலான வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த தோட்டத்தில் தங்கியிருந்த 6 பேர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேககத்திற்கிடமான குறித்த தோட்டப்பகுதியில் அதன் உரிமையாரை தவிர்ந்து வேறு யாரும் உள்ளே செல்ல முடியாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் குறித்த 6 பேரும் அங்கி தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர்களுள் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட இருவரும் இருப்பாதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுடைய தோட்டங்களில் தென்னை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக வருகை தந்ததாக சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வனாதவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

