கண்டி, வில்லியம் கோபல்ல மாவத்தையில் உள்ள புகையிரத கடவையில் புகையிரதத்துடன் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பேராதெனியவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முருதகஹமுல பகுதியை சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

