தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல்

286 0

தபால் ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இன்று மாலை 4 மணியளவில் பிரதமர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (21) நள்ளிரவு முதல் தபால் சேவைகள் தொழிற்சங்கம் வேலைநிறத்த போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில் இன்று (22) நள்ளிரவு வரையில் இவ்வாறு வேலைநிறுத்ததில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் தொழிற்சங்கத்தின் செயலாளர் எச்.கே காரியவசம் தெரிவித்துள்ளார்.

பிரச்சினைகள் உள்ளடங்கிய அமைச்சரவை பத்திரம் கடந்த அமைச்சரவை கூட்டத்தின் போது நிதி அமைச்சர் வருகை தராத காரணத்தினால் கலந்துரையாடப்படவில்லை எனவம் சிக்கல் தொடர்பில் தான் நன்கு அறிவதாகவும் தபால் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்துள்ளார்.