அவசரகால விதிகள் நடைமுறையில் காணப்படினும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை-திலக் மாரப்பன

332 0

சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தை நிலைநிறுத்துதல், மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு என்பன தொடர்பில் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம்.

எமது அரசாங்கத்தின் கீழ் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவசரகால விதிகள் நடைமுறையில் காணப்படினும் கூட, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கு  சுதந்திரமானது மட்டுப்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளரிடம் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன எடுத்துரைத்துள்ளார்.

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை இம்மாதம் 18 – 26 வரை ஆரம்பித்துள்ள சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கும் அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான உரிமைகளுக்கான ஐ.நா.வின் விஷேட அறிக்கையாளர் க்ளெமென்ட் நைலெட்சோசி வோல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் கடந்த வியாழக்கிழமை சந்தித்தார்.

அதன்போது சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கானதும், மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு குறித்த ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதுமான புதிய பாதையில் பயணிக்கும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஒன்றுகூடுவதற்கான மற்றும் அமைதியாக ஒருங்குசேர்வதற்கான சுதந்திரம் பொதுமக்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாரப்பன சுட்டிக்காட்டினார்.

அவசரகால விதிகள் நடைமுறையில் காணப்படினும் கூட, ஒன்றுகூடுவதற்கும்  அமைதியாக ஒருங்குசேர்வதற்குமான சுதந்திரமானது மட்டுப்படுத்தப்படவில்லை என்றும் ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்களுக்குப் பின்னர் நாட்டில் பல எதிர்ப்புக்கள், தொழிற்சங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அண்மையில் ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு விஷேட அறிக்கையாளர் தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, சம்பவங்களுக்குப் பின்னர் மீட்சி பெறவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும் முடிந்தமையையிட்டு அவர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களின் தலைமையின் கீழான சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்குதாரர்களின் சந்திப்பிலும் விஷேட அறிக்கையாளர் மற்றும் அவரது குழுவினர் கலந்து கொண்டனர். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், கௌரவ சட்டமா அதிபர் திணைக்களம்,  தொழிலாளர் திணைக்களம், தேசிய ஒருங்கிணைப்பு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு, நிதி அமைச்சு, முதலீட்டு சபை மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன உள்ளடங்கலான அரச முகவர்ளின் பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

பரிசோதனை நேரங்கள் முழுவதிலும் கூட ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்துடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பைப் பேணிவந்ததாக வெளிவிவகார செயலாளர் சுட்டிக்காட்டினார். ஒன்றுகூடுவதற்கான மற்றும் அமைதியாக ஒருங்குசேர்வதற்கான சுதந்திரம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் அளவீடுகள் மற்றும் எதிர்கொள்ளும் சவால்கள் ஆகிய இரண்டிலும் ஒரு சமமான முன்னோக்கைப் பெற்றுக்கொள்வதற்கு உதவுவதாக அமையும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விஷேட அறிக்கையாளர் ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவர் மேலும் குறிப்பிட்டார்.