முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியே இனவாதத்தை பரப்புகிறார் – மஸ்தான்

363 0

முஸ்லிம் அரசியல்வாதியின் பினாமியாக இருக்கும் ஒருவரே வன்னியில் இனவாத கருத்தை பரப்பி வருவதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “யுத்த காலத்தில் எந்தளவிற்கு நாம் சினேகபூர்வமாக இங்கு இருந்தோமோ அதேபோன்றே சினேகபூர்வமாக இருக்கவேண்டும் என்பதில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மக்கள் மிகத்தெளிவாக இருக்கின்றனர்.

அவ்வாறான நிலையை அரசியல் வியாபாரிகளாக உள்ளவர்கள் சிதைக்கப்பார்க்கின்றனர். அதன் பின்னணியில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் இருப்பதாக அறிய முடிகின்றது.

வன்னியில் அரசியலிலும் பினாமிகளாக சிலர் செயற்படுவது ஆச்சரியமான செயல். அவர்களுக்கு தேர்தல் காலங்களில் மக்கள் தகுந்த பாடம் வழங்குவார்கள்” என மேலும் தெரிவித்தார்.