ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
2016ம் ஆண்டு ஜூன் மாதம் 06ம் திகதி கொழும்பு வடக்கு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட கொழும்பு, மருதானையில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞர் ஒருவருக்கு 10.28 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்தமையை அடுத்தே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சட்ட மா அதிபரால் வழக்குத் தொடரப்பட்டு நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த விசாரணையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

