உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள்-கருணா

296 0

palaஇறுதி யுத்தத்தில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தேசியத்தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனை உடனடியாகச் சுட்டுக்கொல்லுமாறும் இல்லாவிட்டால் இவனே நாளைக்கு தலைவராக வருகை தந்து உங்களுடன் மூர்க்கமாகப் போராடுவான் எனக் கருணா தெரிவித்ததாக 57ஆவது பட்டாலியனின் இராணுவத் தளபதி கலிங்கே ரத்னே தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சரணடைந்த போராளிகளை நயவஞ்சகமாகக் கொலை செய்யப்பட்டனர் எனவும், அதில் தேசியத் தலைவரின் மூத்த மகன் கடுமையான காயங்களுடன் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டே கொலை செய்யப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பிடிபட்டதும், அவரைத் தங்கள் இராணுவ முகாமில் வைத்து தண்ணீரும், பிஸ்கட்டும் வழங்கியதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனக்கு ஒரு மாபெரும் தலைவரின் மகனைப் பார்த்ததும் ஆச்சரியமேற்பட்டதாகவும், தான் அப்போது அச்சிறுவனைச் சுட்டுக்கொல்லப்போகின்றோம் என நினைத்துப் பார்க்கக்கூட இல்லையெனவும் தெரிவித்துள்ளார்.

பாலச்சந்திரன் தொடர்பாக இராணுவத் தலைமையகத்துக்கு செய்தி போய்ச் சேர்ந்ததும் இராணுவத் தளபதியும் கருணாவும் அங்கே வருகை தந்ததாகவும், அவனை என்ன செய்வது என ஆலோசனை நடாத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அவர்களின் ஆலோசனையின் பின்னர், கருணா, இவனை நீங்கள் விட்டுவிட்டால், இவனே நாளை புலிகளின் தலைவன், இவன் அவனின் அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களுடன் போரிடுவான். உங்களால் தாக்குப்பிடிக்க முடியாது. உடனே இவனைச் சுட்டுக் கொல்லுங்கள் எனக் கூறியதும் தான் கலங்கிப்போயுள்ளதாகவும், உடனே அச்சிறுவனைச் சுற்றி மூன்று வீரர்கள் நின்று சுட்டுக்கொன்றதாகவும் தனது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.