விமானம் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென பயணிகளை மிரட்டிய பெண்ணுக்கு அந்நிறுவனம், ரூ.72 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலம், பெர்க்ஸ் கவுண்டியின் மைதன்ஹெட் பகுதியைச் சேர்ந்தவர் சோலி ஹைன்ஸ்(25). இவர் சமீபத்தில் லண்டனின் ஸ்டான்ஸ்டட் விமான நிலையத்தில் இருந்து துருக்கி செல்லும் ஜெட்-2 நிறுவன விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த சோலி ஹைன்ஸ், விமானிகள் இருக்கும் காக்பிட் அறையின் கதவினை அத்துமீறி திறக்க முற்பட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் சோலியை தடுக்கவே ஆவேசமாக கத்த தொடங்கினார்.

இந்த சம்பவம் குறித்து ஜெட்2 விமான நிறுவன அதிகாரி கூறுகையில், ‘இது பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்று இனி யாரும் நடந்துக் கொள்ளக் கூடாது. அதற்காக அவருக்கு 85,000 பவுண்ட்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சோலி, அந்த அபராதத்தை கட்டவில்லை என்றால், நாங்கள் முறையாக சிவில் கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று அபராதத்தை பெறுவோம்’ என கூறியுள்ளார். விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது திடீரென தனது இருக்கையில் இருந்து எழுந்த சோலி ஹைன்ஸ், விமானிகள் இருக்கும் காக்பிட் அறையின் கதவினை அத்துமீறி திறக்க முற்பட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்கள் சோலியை தடுக்கவே ஆவேசமாக கத்த தொடங்கினார்.

இந்த சம்பவம் குறித்து ஜெட்2 விமான நிறுவன அதிகாரி கூறுகையில், ‘இது பயணிகளுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இதுபோன்று இனி யாரும் நடந்துக் கொள்ளக் கூடாது. அதற்காக அவருக்கு 85,000 பவுண்ட்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.75 லட்சம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சோலி, அந்த அபராதத்தை கட்டவில்லை என்றால், நாங்கள் முறையாக சிவில் கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று அபராதத்தை பெறுவோம்’ என கூறியுள்ளார்.