மைத்திரியின் உத்தரவை மீறி முன்னாள் இராணுவத்தளபதியிடம் விசாரணை!

277 0

daya-1போரில் பங்காற்றிய இராணுவத் தளபதிகளையும் புலனாய்வு அதிகாரிகளையும் விசாரணைக்குட்படுத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லையென சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததையடுத்து இன்று முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க இலஞ்ச ஊழல் ஆணைக்குழுமுன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

சிறீலங்காவின் 20ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்கா பதவியில் இருக்கும்போது 50 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக அவரிடம் பாரிய ஊழல் மோசடி மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழு அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவுக்கமைய லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க இன்று முற்பகல் 10.00மணியளவில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னிலையானார்.

போரை முடிவுக்கு கொண்டுவந்த முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிராக சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கடந்த 12 ஆம் திகதி இராணுவத்தினர் முன் உரையாற்றும்போது கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.

எனினும் அவரது உத்தரவை மீறி இன்று லெப்டினன்ட் தயா ரத்நாயக்க விசாரணைக்குட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.