கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள் ஒருங்கிணைந்து புத்தளம் பகுதியில் நேற்றைய தினதம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது, பாலுணர்வு மாத்திரைகளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
கைதான சந்தேக நபரிடமிருந்து 6800 பாலுணர்வு மாத்திரைகள் கொண்ட 272 பொதிகளை மீட்டெடுத்துள்ளதுடன், அவரது கடை மற்றும் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 சட்டவிரோத சிகரெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் 61 வயதான புத்தளம், பாழவிய பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

