சூதாட்ட குழுவினரை கைது செய்ய முற்பட்ட பொலிஸார் மீது தாக்குதல்

322 0
தொடங்கொட, பொம்புவெல, தித்தவெல்கொடெல்ல பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குழுவினரை கைது செய்ய தொடங்கொட பொலிஸார் முற்பட்ட வேளை தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த 2 பொலிஸார் களுத்துறை, நாகொட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் 39 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் குறித்து தொடங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.