கன்னியாவில் ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான்.

537 0

திருகோணமலை கன்னியாவில் பிள்ளையார் கோவிலை இடித்து விகாரை அமைப்பதற்கு எதிராக இன்று போராட்டம் நடைபெற்ற போது தென்கயிலை ஆதின முதல்வர் மீது சிங்கள காடையன் ஒருவன் சுடுதேநீரை ஊற்றியுள்ளான். அதனையடுத்து குறித்த சிங்கள காடையனை சிறிலங்கா பொலிஸார் பத்திரமாக அழைத்துச் சென்று காப்பாற்றியுள்ளனர். அவனை கைது செய்யுமாறு அங்கு கூடியுள்ள சட்டத்தரணிகள் வலியுறுத்திய போதும் பொலிஸார் குறித்த காடையனை காப்பாற்றுவதிலேயே கவனமாக இருந்தனர்

சிறிலங்காவில் தமிழர்களின் நிலை இது தான்!

கன்னியா வெந்நீருற்று கிணறுகள் அமைந்திக்கும் இடத்திற்கு ஆர்ப்பாட்டமாக செல்ல முயன்ற தமிழ் மக்களை சிங்கள இராணுவம் மற்றும் பொலிஸாரினால் சுமார் ஒரு கிலோமீற்றர் துாரத்தில் கன்னியா பிரதான வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் பதற்றமான சூழல் காணப்படுகின்றன

மேலும், ஆர்ப்பாடட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருந்த பிரதேசத்திற்கு குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையார் மற்றும் தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகர்த்தியர் அடிகளார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இதன்போது, அங்கு குழுமியருந்த பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரையும் அநாகரிகமாக அணுக முற்பட்டதையடுத்து பேச்சுவார்த்தை முயற்சியை கைவிட்ட பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர் குழுமியிருந்த இடத்திற்கு அவர்களை திருப்பி அழைத்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, அநாகரிகமாக அணுக முற்றபட்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொலிஸார், குறித்த விடயம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறும் தாங்கள் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பிரதேசத்தில் தொடர்ந்தும் பதற்றமான நிலைமை காண்படுவதாகவும் வடக்கு – கிழக்கு பிரதேசத்தில் இருந்து திரண்டு வந்துள்ள பல்வேறு தமிழ் மக்கள் குறித்த பிரதேசத்தில் காணப்படுகின்றார்கள்.