மின்சார சபை உழியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு-ரவி

379 0

இலங்கை மின்சார  சபை ஊழியர்களின் சம்பள பிரச்சினைக்கு எதிர்வரும் 30 திகதிக்கு முன்னர் தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சாரை சபை ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது எனவும் ,  அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கையல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளர்களின் கட்டண அறவீட்டு முறைமையை காலத்திற்கு ஏற்ற வகையில் புதுப்பிப்பது சிறந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.