பண மோசடி தொடர்பாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
20 இலட்சம் ரூபாய் பண மோசடி தொடர்பில் கொழும்பு நிதி மோசடி விசாரணை பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் நரம்மல பகுதியில் வைத்து நேற்று மாலை கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் 52 வயதுடையவர் எனவும், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (12) ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

