ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது

306 0
வெல்லம்பிட்டிய மற்றும் கல்கிஸ்ஸ பிரதேசங்களில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி, கித்தம்பகுவ பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 02 கிராமும் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கித்தம்பகுவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

இதேவேளை றத்மலான புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து 02 கிராமும் 400 மில்லிகிராம் ஹெரோயினுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

றத்மலான பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரே கைதாகியுள்ளதுடன், அவர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.