அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும்!

297 0

தற்­போ­தைய அர­சாங்­கத்தை வீழ்த்­தினால் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷவின் அர­சாங்­கமே உரு­வாகும். அவர்­களின் அர­சாங்­கத்தில் கடந்த காலங்­களில் தமிழ் மக்கள் பட்ட துன்­பங்­களை நாம் மறக்­க­வில்லை. 

ஆக­வேதான் இந்த அர­சாங்­கத்தை வீழ்த்­தா­துள்ளோம் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் ஆர்.சம்­பந்தன் நேற்று சபையில் தெரிவித்தார்.

இன்னும் சிறிது காலத்தில் பொதுத் தேர்தல் வரும்.  அதில் மக்கள் தமக்­கான அர­சாங்­கத்தை உரு­வாக்­கிக்­கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பிர­தமர், அர­சாங்கம் மற்றும் அமைச்­ச­ர­வைக்கு எதி­ராக ஜே.வி.பி கொண்­டு­வந்­துள்ள நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான

இரண்டாம் நாள் விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்

கடந்த உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல்  நடத்­தப்­போ­வ­தாக அர­சாங்­கத்­துக்கு தகவல் கிடைத்தும் அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை. அயல் நாட்டில் இருந்து தகவல் கிடைத்தும் அதனை அர­சாங்கம் கருத்­தில்­கொள்­ள­வில்லை. இவ்­வா­றான நிலையில் அர­சாங்­கத்தை வீழ்த்த மக்கள் விடு­தலை முன்­னணி நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வந்­துள்­ளது. இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் அர­சாங்கம் தோற்றால் அர­சாங்கம் பதவி விலக வேண்டும். அப்­படி இந்த அர­சாங்கம் பதவி வில­கினால் அடுத்­த­தாக யார் ஆட்­சியை அமைப்­பது என்ற கேள்வி உள்­ளது. அவ்­வா­றான நிலையில் மஹிந்த ராஜபக் ஷவே மீண்டும் ஆட்­சியை அமைப்பார்.

2015 ஆம் ஆண்டு ஜனா­தி­ப­தித்­தேர்தல் மற்றும் பொதுத்­தேர்­தல்­களில் மக்கள் ஜனா­தி­ப­தி­யையும் அர­சையும் மாற்­றி­ய­மைத்­தனர். இதற்கு பல கார­ணங்கள் உள்­ளன. மனித உரிமை மீறல்கள் சமூக,பொரு­ளா­தார உரிமை மீறல்கள் கடந்த ஆட்­சியில்  இடம்­பெற்­றன. இதனால் தமிழ் மக்­களே அதிகம் பாதிக்­கப்­பட்­டனர். ஆனால் தற்­போ­தைய அரசு அவ்­வா­றான செயல்­களை செய்­ய­வில்லை. மனித உரிமை விட­யங்­களில் முன்­னைய அரசை விடவும்  மிகவும் சிறப்­பா­னது என்று சொல்­ல­மு­டி­யாத போதிலும் ஓர­ளவு சிறப்­பாக செயற்­பட்­டுள்­ளனர்.

இந்த  நிலையில் தற்­போ­தைய அர­சாங்கம் மாற்­றப்­பட்டு புதிய அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்தால் இவர்கள் சிறு­பான்மை மக்­களை எவ்­வாறு நடத்­து­வார்கள் என்ற எந்த உத்­த­ர­வா­தமும் இல்லை. கடந்த ராஜபக் ஷ ஆட்­சியில் அதி­க­மாக வடக்கு கிழக்கு தமிழ் மக்­களே பாதிக்­கப்­பட்­டனர் .  எனவே புதிய அரசின் தமிழ் மக்கள் தொடர்­பான கொள்கை தெரி­யாது தற்­போ­துள்ள அரசை நாம் எப்­படி எதிர்த்து வாக்­க­ளிப்­பது?நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு எப்­படி ஆத­ர­வ­ளிப்­பது?

விரைவில் பொதுத்­தேர்தல் நடக்­க­வுள்­ளது. புதிய அரசு அர­சி­ய­ல­மைப்­பின்­படி தேர்ந்­தெ­டுக்­கப்­படும். இன்று  காலை [நேற்று] திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள எனது வீட்­டுக்கு முன்­பாக இளை­ஞர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

தமக்கு சம்­பந்தன் வேலை வாய்ப்பு பெற்­றுத்­த­ர­வில்­லை­யென குற்றம்­சாட்­டினர். இன்று [நேற்று] அர­சுக்கு எதி­ராக வாக்­க­ளிக்க வேண்­டு­மெ­னக்­கூ­றினர். இந்த அரசில் கூட எமது  இளை­ஞர்­க­ளுக்கு நீதி கிடைக்­க­வில்லை.

அவர்­க­ளுக்­கான வேலை வாய்ப்­புக்கள் கிடைக்க வேண்டும்.  தமிழ் மக்கள் தொடர்­பான தமது கொள்­கையை ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அக்­கட்­சியின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ருக்­குக்­கூட நாம் ஆத­ர­வ­ளித்­துள்ளோம். ஆனால் பொதுஜன பெரமுன தமிழ் மக்கள் தொடர்பான தமது கொள்கையை இன்னும் வெளிப்படுத்தவில்லை.

எனவே இது தொடர்பில் எதுவும் தெரியாது தற்போதுள்ள அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாம் எப்படி ஆதரவளிக்க முடியும்?எனவே கடவுள் அனுக்கிரகத்துடன் நாம் ஒரு முடிவை எடுத்தது அதன்படி செயற்படுவோம் என்றார்.