138 கடவத்தை – புறக்கோட்டை நோக்கிச் செல்லும் தனியார் பஸ் ஒன்றில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இன்று (09) காலை குறித்த பஸ் மோட்டார் சைக்கிளொன்றை முந்திச் செல்ல முற்பட்ட போதே இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் கைலப்பாக மாறியுள்ளது.
குறித்த பஸ்ஸின் சாரதி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை தாக்கிவிட்டு பஸ்ஸூக்குள் சென்ற போது, பின்னர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த பஸ்ஸூக்குள் நுழைந்து பஸ்ஸின் சாரதியை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் வீடியோ காணொளியாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

