லிட்ரோ கேஸ் நிறுவன மோசடி தொடர்பான தீர்ப்பு ஆகஸ்ட் 8 ஆம் திகதி!

345 0

லிட்ரோ கேஸ் நிறுவனத்தில் இடம்பெற்ற 500 மில்லியன் ரூபா மோசடி குறித்த வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 8 ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்படவுள்ளது.லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாவுக்கும் அதிக நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் அலுவலக தலைமை அதிகாரி காமினி செனவிரத்ன உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.