நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களில் இன்று மின்விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
சில பிரதேசங்களில் தற்போது மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் அபிவிருத்திப் பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மின்சார சபைக்கு தேவையான மின்சாரத்தில் நூற்றுக்கு 95 வீதமானது மின்சாரம் மின் நிலையத்தின் ஊடாக உற்பத்தி செய்கின்றமையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இலங்கை மின்சார சபையினால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டி இருந்த ஒரு பில்லியன் ரூபா பணத்தை செலுத்த தாமதமானமையினால் மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் 150 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாததனால் மின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்காக இவ்வாறு மின்விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

