கிழக்கு மாகாணத்தை மேல் மாகாணத்தை விடவும் முன்னேற்ற முடியும்- சம்பிக்க

391 0

இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சீவா, லாவோஸ், வியட்நாம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு திறந்து கொடுக்கப்படுமாக இருந்தால், அந்த மாகாணத்தை மேல் மாகாணத்தை விடவும் அதிவிரையில் அபிவிருத்தி செய்யலாம் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் நடைபெற்ற தேசத்துக்கான பாதை எனும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

எமது இலங்கையில் கிழக்கு மாகாணம், எமது திருகோணமலை, மட்டக்களப்பு வலயம் என்பவற்றை விஞ்ஞான ரீதியில் திட்டமிட்டு வெளிநாடுகளுக்கு திறந்து கொடுக்கப்படுமாக இருந்தால் பாரிய பொருளாதார வளர்ச்சியொன்றைக் காணலாம்.

இருப்பினும், சுதந்திரத்தின் பின்னர் 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் எமது கிழக்கு மாகாண கரையோரப் பகுதிகளுக்கு என்ன செய்திருக்கின்றார்கள். பிராந்தியத்துக்கோ, நாட்டுக்கோ பொருளாதாரத்தை சேர்க்கக் கூடிய, நாட்டையும் நாட்டு மக்களையும் பலப்படுத்தும் விதத்தில் பொருளாதார நலனொன்று அங்கு இருக்கின்றதா? இல்லை என்றே கூறவேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.