சிங்கப்பூரில் தமிழ் பெயருடன் ஓடும் ரயில்!

315 0

12-4தமிழர்களின் பண்டிகைகளில் முக்கியமான பண்டிகையாக தீபாவளி காணப்படுகின்றது.உலகத்தில் உள்ள தமிழ் மக்கள் அனைவரும் இப்பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.இந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளிலேயே அதிகமாக கொண்டாடப்படுவது வழக்கமாக உள்ளது.

இருப்பினும் தமிழர்கள் அதிகமாக வாழும் “லிட்டில் இந்தியா” என்று அழைக்கப்படும் சிங்கப்பூரின் நகரத்தில் தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு தமிழில் பெயர் பொறிக்கப்பட்ட புகையிரத சேவை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.

தீபாவளியினை முன்னிட்டு குறித்த புகையிரத சேவையினை அமுல்படுத்துவதற்கு அந்த நாட்டின் போக்குவரத்து அமைச்சர் Khaw Boon Wan மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் என்ன சிறப்பு எனில் குறித்த புகையிரதத்தில் பலவகையான அலங்காரங்க பொருட்கள் சோடிக்கப்பட்டுள்ளதுடன், கோலங்கள், சிறு சிறு கடைகள் மற்றும் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சில அட்டைகள் அங்கு காணக்கூடியதாக உள்ளது.

குறித்த புகையிரத சேவையினை அடுத்த மாதம் வரை நீடிப்பதற்கு அந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியாவில் மிகப்பெருமளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவது வழக்கம் இருப்பினும் ஜெயலலிதா வைத்தியசாலையினில் அனுமதிக்கப்பட்டிருப்பதினால் இந்த பண்டிகை கொண்டாடப்படுவது கேள்விக்குறியான விடயமாகவே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.