வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு நடை பவனி

305 0

white-sticks-01யாழில்  சர்வதேச வெள்ளைப் பிரம்பு  தினத்தை  முன்னிட்டு நடை பவனி  ஓன்று  இன்று நடைபெற்றது.

இந் நிகழ்வானது சர்வதேச லயன்ஸ் கழகத்தின் 306 பி1 மாவட்டத்தின் ஏற்பாட்டில் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகங்களும் இணைந்து இன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் ஆரிய குளச்  சந்தியிலிருந்து யாழ் பொது நூலகம் வரை குறித்த நடைபவணி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் விசேட தேவைக்குரியோருக்கான கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக  லயன் கழகத்தின் சென்ரேனியல் மாவட்டத்தின் ஆளுநர்  தியகராஜா மற்றும் லயன் லடி ரஞ்சி போன்றவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் மாநகர சபையின் ஆணையாளர் பி. வாகீசன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

white-sticks